அரவக்குறிச்சி, மார்ச் 18: அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரம் காவல் நிலைய வட்ட ஆய்வாளராக ஈஸ் வரன் பொறுப்பேற்றார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வாளராக கடந்த ஏழு மாதங்களாக கோபி பொறுப்பு இன்ஸ்பெக்டராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பணி மாறுதல் காரணமாக கோபி மாயனூர் காவல் நிலையத்திற்கு சென்று விட்டார்.
இதனால் திருச்சி மாவட்டத்திலிருந்து ஈஸ்வரன் அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரம் வட்ட காவல் நிலைய புதிய ஆய்வாளராக நேற்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் நிலைய ஆய்வாளர் ஈஸ்வரன் இதற்கு முன்பு 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரவக்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.