கரூர், மார்ச் 14: வளர்ச்சித்துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கரூர் மாவட்டம் முழுதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் உட்பட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையம் நிரப்ப வேண்டும்.
கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உட்பட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் எனபன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி மார்ச் 13ம்தேதி கரூர் மாவட்டம் முழுதும் தற்செயல் விடுப்பு எடுத்து அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து, அதன்படி, கரூர் மாவட்டத்தில் இந்த அமைப்புகளின் சார்பில 194 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.