குஜிலியம்பாறை அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

குஜிலியம்பாறை, மார்ச் 20: குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 செம்மறி ஆடுகள் பலியாயின. குஜிலியம்பாறை ஒன்றியம், மல்லப்புரம் ஊராட்சி பாறைப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (79) விவசாயியான இவர் செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று இவர் தனது நிலத்தில் 14 ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு சென்றார்.

அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய்கள், கம்பி வேலிக்குள் புகுந்து அங்கு மேய்ச்சலில் இருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின. ஆடுகளின் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் ஓடி வந்து மற்ற ஆடுகளை காப்பாற்றினர். இப்பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து செம்மறி ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. எனவே கிராம ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குஜிலியம்பாறை அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: