‘கான்கஜுரா’ என்ற வெப்தொடரில், ஆஷு என்ற கேரக்டரில் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த கேரக்டர் எளிதில் கிடைக்கக்கூடியது அல்ல. ஆஷு எப்படி இருப்பான் என்று கண்டுபிடிக்க, இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. அவன் வித்தியாசமாக நடக்கும் தெளிவான மனிதன். அவனுக்கு குடும்பத்தில் இருக்கும் உணர்வும், ஒரு கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் உணர்வும் மட்டுமே வேண்டும். ஆஷுவின் வழிமுறைகள் என்னவாக இருக்கும், ஒவ்வொரு சூழ்நிலையையும் அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று புரிந்துகொள்ள இயக்குனர் சந்தன் அரோரா உதவினார். ‘கான்கஜுரா’ என்பது கோவாவை மையப்படுத்தி உருவான உளவியல் திரில்லர் தொடர்.
பிரிந்து சென்ற சகோதரர்கள் தங்களது கடந்த காலத்தை எதிர்கொள்கையில், அவர்களது நினைவுகள் ஆபத்தான யதார்த்தமாக மாறுகின்றன. அஜய் ராய் தயாரித்துள்ள வெப்தொடரில் மகேஷ் ஷெட்டி, மோஹித் ரெய்னா, நினாத் காமத், சாரா ஜான் டயஸ், திரிநேத்ரா ஹால்டர், உஷா நட்கர்னி உள்பட பலர் நடித்துள்ளனர். இஸ்ரேலிய ‘மாக்பி’ தொடர் போல் உருவாக்கப்பட்டுள்ள இது, எஸ் ஸ்டுடியோ சார்பில் ஆடம் பைசான்ஸ்கி, ஓம்ரி ஷென்கார், டானா ஈடன் ஆகியோரால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. டோனா, ஷூலா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த வெப்தொடர், நாளை முதல் சோனி லைவ்வில் ஒளிபரப்பாகிறது.