புதுமுகங்களின் அனல் மழை

சென்னை: சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் அ. அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அனல் மழை’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மோகன், கதாநாயகன் அப்துல் ஷரீப், கதாநாயகி சுபாஷிணி, நடிகர் பிரதிப் செல்வராஜன், நடிகர் காதல் சுகுமாரன் உள்பட பலர் பங்கேற்றனர். தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ‘‘இன்றைய காலத்தில் பெரிய படங்களை விட, சிறு பட்ஜெட் படங்கள் தான் வெற்றியைக் கண்டு வருகிறது, அதே போல இந்தப் படமும் வெற்றி அடைய வாழ்த்துக்கள், இந்த வெற்றி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும்’’. இயக்குனர் அய்யனாரப்பன் பேசும்போது, ‘‘இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது. பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி’’ என்றார்.

Related Stories: