தமிழ் பாடகி கொடுத்த பார்ட்டியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள்

ஐதராபாத்: தெலுங்கில் பிரபல நாட்டுப்புற பாடகியாக வலம் வருபவர் மங்லி. அங்கு திரைப்படங்களிலும் தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள திரிபுரா ரெசார்ட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டியில் மங்லிக்கு தொடர்புடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், திரை பிரபலங்கள் என கிட்டத்தட்ட 50 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மங்லியில் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போது அங்கு போதைப்பொருட்கள், கஞ்சா மற்றும் உயர் ரக வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மங்லி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பார்ட்டியில் 48 நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் ஒன்பது பேர் கஞ்சா பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: