புர்ஜ் கலீஃபாவில் மோகன்லாலின் வீடு மதிப்பு தெரியுமா?

சென்னை: 2004-ல் தொடங்கி 2010-ல் கட்டி முடிக்கப்பட்ட புர்ஜ் கலீஃபா, துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட 163 மாடிக் கட்டிடம். இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிளாட்கள் வாங்கியுள்ளனர். மோகன்லால் 29வது மாடியில் ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட பிளாட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் 13.5 கோடி. இதை அவர் தனது காதல் மனைவி சுசித்ரா லால் பெயரில் பதிவு செய்துள்ளார்.

மோகன்லால் துபாயில் மற்றொரு சொகுசு வில்லாவில் 3 பிஹெச்கே அபார்ட்மெண்ட் ஒன்றையும் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், மாதவன் போன்ற நடிகர்களுக்கும் துபாயில் சொத்துக்கள் இருக்கிறது. சமீபத்தில் மோகன்லால் நடித்த ‘எல் 2: எம்புரான்’, ‘துடரும்’ ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்தன. அப்போது துபாயில் புரமோஷனில் அவர் பங்கேற்றார். புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமைமையை மோகன்லால் பெற்றுள்ளார்.

Related Stories: