சென்னை: இலங்கை தமிழர்கள் உருவாக்கிய ‘தீப்பந்தம்’ என்ற படத்தின் பிரத்தியேக காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. பிறகு நடந்த நிகழ்ச்சியில் ஓவியர்கள் மருது, புகழேந்தி, இயக்குனர்கள் வ.கவுதமன், கவிதா பாரதி, ராசி அழகப்பன், கேந்திரன் முனியசாமி, அஜயன் பாலா மற்றும் ஜாகுவார் தங்கம், முத்துக்காளை, சவுரி ராஜன் பங்கேற்று படத்தை பாராட்டி பேசினர்.
ராஜ் சிவராஜ் இயக்கத்தில் தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை, மதி சுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ் நடித்துள்ளனர். பூவன் மதீசன் இசை அமைத்து எழுதிய கதைக்கு ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் திரைக்கதை எழுதியுள்ளனர். ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்லுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை பிளாக்போர்ட் இண்டர்நேஷனல் வழங்குகிறது.