பெய்டு வியூஸ் விஜய் பட தயாரிப்பாளர் ஒப்புதல்

ஐதராபாத்: விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தைத் தயாரித்த பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு அவரது தயாரிப்பில் அடுத்த வர உள்ள ‘தம்முடு’ தெலுங்குப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ‘பெய்டு வியூஸ்’ குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். தில் ராஜூ பேசும்போது, ‘‘சமூக வலைத்தளத்தில் பெய்டு வியூஸ் மூலம் அந்தப் படம் ரசிகர்களிடம் உண்மையான ஆர்வத்தைத் தூண்டியதா என்பதை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.

இதற்கேற்றபடி மாறுவது கடினம் தான் என்றாலும் இதுதான் முன்னோக்கிச் செல்லும் ஒரு வழி. ஊடகங்கள் நம்மை சிக்கலான ஒரு சூழலில் தள்ளுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றன. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்க்கட்டும். எனவே, பொய்யான டிஜிட்டல் பார்வைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு சில தயாரிப்பாளர்கள் சமூக வலைத்தளத்தில் இப்படி பணம் கொடுத்து பார்வைகளை அதிகப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்துள்ளது. தற்போது பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Related Stories: