முன்னாள் மனைவியுடன் ஊர் சுற்றும் ஹீரோ

பாலிவுட் முன்னணி ஹீரோ ஹிரித்திக் ரோஷனுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். ஹீரோயின்கள் பலரும் அவருக்கு தீவிர ரசிகைகளாக இருக்கின்றனர். சிலர் ஹிரித்திக் ரோஷனை காதலித்தனர். அவரோ பேஷன் டிசைனர் சூசன் கானை காதலித்தார். இருவரும் கடந்த 2000ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் 2014ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். மகன்கள் ரிதான், ரிஹான் இருவரும் அம்மா சூசன் கானுடன் வசிக்கின்றனர்.

மகன்கள் விஷயத்தில் இருவரும் சேர்ந்தே முடிவு எடுக்கின்றனர். சூசன் கானை விவாகரத்து செய்து பிரிந்தபோது, அவருக்கு ஜீவனாம்சமாக ஹிரித்திக் ரோஷன் 380 கோடி ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியானது. இத்தொகை சூசன் கான் கேட்டதை விட குறைவு என்று சொல்லப்படுகிறது. தனக்கு ஜீவனாம்சமாக 400 கோடி ரூபாயை சூசன் கான் கேட்டதாக சொல்லப்பட்டது, ஆனால், ஹிரித்திக் ரோஷன் தரப்பில் 380 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இத்தொகை அவரது லைஃப் டைம் செட்டில்மெண்ட் ஆகும்.

தற்போது ஹிரித்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான சபா ஆசாத்தை காதலிக்கிறார். அதுபோல், அர்ஸ்லான் கோனியை சூசன் கான் காதலிக்கிறார். நால்வரும் அடிக்கடி அவுட்டிங் சென்று வரும் போட்டோக்களை வெளியிடுகின்றனர். விவாகரத்துக்கு பிறகு முன்னாள் மனைவியுடன் நட்பாக இருப்பதும், அவரது காதலனுடன் சேர்ந்து தனது புது காதலியுடன் அவுட்டிங் சென்று வருவதும், ஹிரித்திக் ரோஷனின் ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: