இதுகுறித்து சாந்தனு, கீர்த்தி அளித்துள்ள திடீர் விளக்கம் வருமாறு:
உண்மையிலேயே எங்கள் மீது அதிகமான அக்கறை கொண்ட பலர், எங்களுக்கு ஏன் குழந்தை இல்லை என்று கேட்கின்றனர். வேறு சிலர், ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காகவே, குழந்தை எப்போது என்ற ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர். நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுங் கள் அல்லது குழந்தை பெற்ற பிறகு அந்த குழந்தையை கவனித்துக் கொள்ளும் பேபி சிட்டர் ஆக வருகிறீர்களா என்பதை சொல்லுங்கள். இப்படி பேசுவதை அலட்சியமாக பேசுவது போல் நினைக்க வேண்டாம்.
எங்கள் மனநிலையையும், நாங்கள் எந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம், காலம் இருக்கிறது. கடவுள் எப்போது எங்க ளுக்கு குழந்தை அமைய வேண்டும் நினைக்கிறாரோ அப்போது அது நடக்கும். ஆரம்பத்திலேயே இதுபற்றி பேசியிருக்கிறோம். இக்கேள்வியை 10 வருடங் களாக கேட்டு வருவதால், தற்போது அதுபற்றி தவிர்த்து உறுதியான பதிலை சொல்லியிருக் கிறோம். உண்மையாகவே எங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு நன்றி.