முத்தக்காட்சியில் நடித்த தம்பி; விஷ்ணு விஷால் பொறாமை

சென்னை: ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதை நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் தனது தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால், ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். ஹீரோயினாக மிதிலா பால்கர் அறிமுகமாகிறார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து கிருஷ்ணகுமார் ராமகுமார் கூறும்போது, ‘உதவி இயக்குனர் ருத்ரா, இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் ஒரு கதை சொல்ல, ‘ரொமான்ஸ் கதை இல்லையா?’ என்று அவர் கேட்கிறார். இறுதியில் ருத்ரா படம் இயக்கினாரா என்பது கதை’ என்றார். விஷ்ணு விஷால் கூறும்போது, ‘நிறைய படங்களில் நடித்துள்ளேன் என்றாலும், ருத்ராவுக்கு முதல் படத்திலேயே பல முத்தக்காட்சிகள் கிடைத்துள்ளதை நினைத்து பொறாமையாக இருக்கிறது’ என்றார்.

Related Stories: