ஸ்பிரிட் படத்தால் இயக்குனருடன் மோதல்: தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இந்தியில் இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோன், திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட்டார். தீபிகா படுகோன் விலகலுக்கு காரணங்களாக, 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டது; தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டேன் என்று மறுத்தது; 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நீடித்தால், மேற்கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேறு தொகையில் சம்பளம் கேட்டது உள்பட பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டன. இதையடுத்து சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்ட ஒரு பதிவில், தீபிகா படுகோனின் செயலை எதிர்த்து பகிரங்கமாக சாடினார்.

இந்நிலையில், தீபிகா படுகோனுக்கு ஆதரவாக இயக்குனர் மணிரத்னம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘அது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன். அதை கேட்கும் இடத்தில் அவர் (தீபிகா படுகோன்) இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு திரைப்பட இயக்குனராக, இதை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். அவர் கேட்பது நியாயமற்ற விஷயம் இல்லை. ஒரு முழுமையான அடிப்படை தேவையாகும். அதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

Related Stories: