நிதிலன் சுவாமிநாதனுக்கு ஆஸ்கர் விருது வென்ற கதாசிரியர் விருந்து

லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘குரங்கு பொம்மை’, ‘மகாராஜா’ படங்களை இயக்கியவர் நிதிலன் சுவாமிநாதன். அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நிதிலன் சுவாமிநாதன் சமீபத்தில் நியூயார்க் சென்ற போது, ஆஸ்கார் விருது பெற்ற ‘Birdman’ என்ற படத்தின் திரைக்கதை ஆசிரியர் அலெக்ஸாண்டர் டினேலெரிஸ் என்பவரின் வீட்டிற்கு, அவரது அழைப்பின் பேரில் சென்று உள்ளார். இது குறித்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘‘என்னுடைய வாழ்நாளிலேயே பிடித்த மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று ‘Birdman’. ஒரு ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளருடன் இரவு உணவைச் சாப்பிட்டு, சிறிது நேரம் அவருடன் இருப்பது என்பது அன்றாடம் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து, இத்தனை அன்பும் மரியாதையும் தந்ததற்காக, உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவு செய்துள்ளார்.

Related Stories: