மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா, இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் தனுஷ் காதல் திருமணம் கடந்த 2004ல் நடந்தது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2024ல் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இச்செய்தி தமிழ் திரையுலகை அதிர வைத்தது. விவாகரத்து பெற்றாலும், மகன்களின் எதிர்கால விஷயம் குறித்து இருவரும் இணைந்தே முடிவு செய்கின்றனர்.

தனுஷ் தனது திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு மகன்களை அழைத்து வருகிறார். இந்நிலையில், யாத்ராவுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா பங்கேற்றனர். இருவரும் யாத்ராவை கட்டியணைத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு, ‘நாங்கள் பெருமையான பெற்றோர்’ என்ற கேப்ஷனை தனுஷ் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் போட்டோக்களை பார்த்து மகிழ்ந்த நெட்டிசன்கள், யாத்ராவுக்காக பெற்றோர் மீண்டும் இணைந்துவிட்டதாக கமெண்ட் செய்துள்ளனர்.

Related Stories: