திரையுலகை விட்டு போய்விட நினைத்தேன்: உதயா உருக்கம்

சென்னை: ஜேஸன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்‌ஷன், எம்ஐஒய் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் இணைந்து தயாரித்துள்ள ‘-010’ என்ற படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசை அமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான்விகா பேசும்போது, ‘கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளேன். திறமைசாலிகளுக்கு ஆதரவு தரும் தமிழ் ரசிகர்கள், எனக்கும் பேராதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.

தற்போது தமிழில் பேச கற்று வருகிறேன்’ என்றார். உதயா உருக்கமாக பேசுகையில், ‘திரையுலகை விட்டே போய்விடலாம் என்று அடிக்கடி நான் யோசித்திருக்கிறேன். ஆனால், எனது தன்னம்பிக்கையின் காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். ‘அக்யூஸ்ட்’ படம், என் திரையுலக பயணத்தின் 25வது ஆண்டில் உருவாகியுள்ளது’ என்றார்.

Related Stories: