ஆகஸ்ட் 2ல் தமிழ்நாட்டில் சிம்பொனி இசை நிகழ்ச்சி: பிறந்த நாளில் இளையராஜா தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சிம்பொனி இசை நடத்தப்போவதாக இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜா நேற்று தனது 83வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியையும் சொல்லி இருக்கிறார். லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாட்டில் இசைக்கப் போவதாக இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

‘‘என்னுடைய மக்கள் அந்த சிம்பொனி இசையை கேட்டாக வேண்டும். உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். பிறந்த நாள் வாழ்த்து கூற பல இடங்களில் இருந்து வெகு தூரத்தில் இருந்து சிரமப்பட்டு என்னை பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர். ரசிகர்களை பார்த்ததும் வாயடைத்து போகிறேன். வாயில் வார்த்தைகள் வரவில்லை’’ என்றார் இளையராஜா.

Related Stories: