63வது லீக் போட்டியில் இன்று வென்றால் பிளே ஆப் வீழ்ந்தால் பேக் அப்: ஒரு இடத்துக்கு டெல்லி-மும்பை மோதல்

* ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே ஆப் சுற்றில் எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல் அணிகள் மட்டுமே காத்திருக்கின்றன.
* அந்த 2 அணிகள் மோதும் 63வது லீக் ஆட்டம் இன்று இரவு மும்பை வான்கடே அரங்கில் நடைபெற உள்ளது.
* நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் இதுவரை 12 லீக் ஆட்டங்களில் விளையாடி இருக்கின்றன.
* அவற்றில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை 7-5, அக்சர் படேல் தலைமையிலான டெல்லி 6-5 (ஒரு ஆட்டம் ரத்து) என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன.

* அதனால் இரு அணிகளும் முறையே 14, 13 புள்ளிகளுடன், முறையே 4, 5வது இடத்தில் உள்ளன.
* இந்த 2 அணிகளும் இன்னும் தலா 2 ஆட்டங்களில் மோத உள்ளன. அவற்றில் ஒன்றான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அடுத்தச் சுற்று வாய்ப்பை நெருங்கி விடும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு மங்க தொடங்கும்.
* இந்த 2 அணிகளும் இதுவரை 36 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் மும்பை 20, டெல்லி, 16 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன.
* அவற்றில் அதிகபட்சமாக டெல்லி 257, மும்பை 247 ரன் விளாசி இருக்கின்றன.

* குறைந்தபட்சமாக மும்பை 92, டெல்லி 66 ரன்னிலேயே ஆட்டத்தை முடித்துள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* நடப்புத் தொடரில் ஏப்.13ம் தேதி டெல்லியில் நடந்த 29வது லீக் ஆட்டத்தில் மும்பை 12ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
* இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் மும்பை 4-1, டெல்லி 1-3 (ஒரு ஆட்டம் ரத்து) என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பார்த்துள்ளன.

The post 63வது லீக் போட்டியில் இன்று வென்றால் பிளே ஆப் வீழ்ந்தால் பேக் அப்: ஒரு இடத்துக்கு டெல்லி-மும்பை மோதல் appeared first on Dinakaran.

Related Stories: