5 டெஸ்ட் போட்டியில் மோதல்; இந்தியாவை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்:இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் பேட்டி

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. 4வது சீசன் ஐசிசிடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குட்பட்ட அதன் முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் வரும் 20ம்தேதி தொடங்குகிறது. அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் புதிய கேப்டன் சுப்மன்கில் தலைமையில் இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே இந்தியாவுக்கு எதிராக தொடர் பற்றி இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் அளித்துள்ள பேட்டியில், இந்தியா ஒரு சிறந்த கிரிக்கெட் நாடு, அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இங்கு வருவார்கள். நாங்கள் அவர்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தொடருக்கு முன் வீரர்கள் புத்துணர்ச்சி பெறுவது முக்கியம். ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் எங்கு செல்ல விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்.

முதல் டெஸ்ட்டில் ஆர்ச்சர், மார்க்வுட் என சில தரமான பந்து வீச்சாளர்கள் இல்லை என்றாலும், கிறிஸ் வோக்ஸ், சாம் குக், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங் போன்ற அதிவேக பந்துவீச்சு வீரர்களுடன் எங்களிடம் நல்ல, மாறுபட்ட பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் ஷோயப் பஷீர் எங்களிடம் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சோதிக்கப்படுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கு தயாராக இருக்கிறோம், என்றார்.

 

The post 5 டெஸ்ட் போட்டியில் மோதல்; இந்தியாவை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்:இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: