இந்திய ஆண்கள் அணி: இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கியபோது இந்தியா ஆண்கள் அணி 5 வெற்றி, 3 தோல்விகள் 15 புள்ளிகளுடனும் 3வது இடத்தில் இருந்தது. அடுத்து விளையாடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளிடம் தலா 2 முறை தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி, 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா, இன்னும் 4 ஆட்டங்களில், தலா 2 முறை பெல்ஜியம், ஆஸ்திரேலியா நாடுகளுடன் விளையாட வேண்டி இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே முதல் இடத்தை பிடிக்கலாம். ஆனாலும், அது, நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய ஆண்கள் அணி, ஆன்ட்வெர்ப் நகரில் தொடங்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.
இந்திய மகளிர் அணி: இந்திய பெண்கள் அணி 2வது கட்ட ஆட்டங்களில் இன்று முதல் களமிறங்குகிறது. இதுவரை, இந்திய மகளிர் அணி, தான் விளையாடிய 8 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்வி என 9 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. ஆனால் பெல்ஜியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய வலுவான அணிகளுடன் தலா 2 முறை மோத உள்ளது. அவற்றில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு இங்கிலாந்தில் நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இன்று ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்தி முதல் வெற்றியுடன் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post புரோ ஹாக்கி லீக் தொடரில் தோல்வி பிடியில் சிக்கிய இந்தியா: இன்று ஆஸி அணியுடன் மோதல் appeared first on Dinakaran.