இதில், முதலில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில், டெல்லி அணியின் கியுக் இசாக்கை, ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா, 7-11, 11-10, 11-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 2வதாக நடந்த மகளிர் ஒற்றையர் போட்டியில், ஜெய்ப்பூர் அணியின் பிட் ஈர்லாண்டை, டெல்லி அணியின் மரியா சியாவோ, 6-11, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்தியன் ஞானசேகரன் இணை வென்றது.
4வதாக நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரனை, ஜெய்ப்பூர் அணியின் யஷான்ஷ் மாலிக், 11-10, 11-9, 6-11 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதனால், இரு அணிகளும், 6-6 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் இருந்தால், வெற்றியை தீர்மானிக்க கடைசியாக நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி பரபரப்பாக காணப்பட்டது. அதில், டெல்லி அணியின் தியா சித்தலேவை, ஜெய்ப்பூர் அணியின் ஸ்ரீஜா அகுலா, 11-9, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதனால், 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
The post இந்தியன் ஆயில் யுடிடி பேட்மின்டன் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் இறுதி சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.