எப்ஐஎச் ஹாக்கி ஆஸியிடம் வீழ்ந்த இந்திய மகளிர்

லண்டன்: எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் போட்டியில் நேற்று, இந்திய மகளிர் அணியை, ஆஸ்திரேலியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. லண்டனில் நடந்த இப்போட்டியின் துவக்கம் முதல் ஆஸி வீராங்கனைகள் அட்டகாசமாக ஆடினர். ஆஸியை சேர்ந்த கர்ட்னி ஸ்கோனெல், லெக்ஸி பிக்கரிங், டாடும் ஸ்டீவர்ட் அடுத்தடுத்து கோலடித்து முன்னிலை பெற்றனர். அதன் பின் ஆவேசமாக ஆடிய இந்திய அணியின் தீபிகா, நேஹா இரு கோல்களை அடித்தனர். கடைசியில், 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸி வெற்றி பெற்றது.

The post எப்ஐஎச் ஹாக்கி ஆஸியிடம் வீழ்ந்த இந்திய மகளிர் appeared first on Dinakaran.

Related Stories: