லண்டன்: குவீன்ஸ் கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். பிரிட்டன் தலைநகர் லண்டனில், குவீன்ஸ் கிளப் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் (30), ரஷ்ய வீராங்கனை டயானா மேக்சிமோவ்னா ஸ்னெய்டர் (21) உடன் மோதினார். முதல் செட்டை, ஸ்னெய்டர் எளிதில் கைப்பற்றினார். இருப்பினும் அடுத்த இரு செட்களையும், அட்டகாசமாக ஆடிய கீஸ் வசப்படுத்தினார். அதனால், 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற கீஸ், அரை இறுதிக்கு முன்னேறினார்.
The post குவீன்ஸ் கிளப் டென்னிஸ்: டயானாவை ஈசியாக வென்ற மேடிசன்; அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.