முதல்முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 4வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா வெற்றி. போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.