பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா

குடியாத்தம், மே 13:குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபட உள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம் 14ம் தேதியும், சிரசு திருவிழா 15ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேர் செல்லும் பாதைகள், அம்மன் சிரசு ஊர்வலமாக செல்லும் பாதைகளை ஆய்வு செய்தனர். மேலும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் காலையில் சிரசு புறப்படும் முத்தாலம்மன் கோயில் வரை சென்று ஆய்வு செய்தனர். போக்குவரத்து சீரமைப்பு, பாதுகாப்பு, சி சி டிவி கேமரா கண்காணிப்பு ஆகியவைகளில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்தனர். இவர்கள் 14ம் தேதி (நாளை) முதல் 16ம் தேதி வரை பணியில் ஈடுபட உள்ளனர்.

The post பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: