அவிநாசி, ஏப்.24: அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சியில் உள்ள சிவளாபுரி அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு குண்டம் திருவிழாவை முன்னிட்டு, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகளும், சிவளாபுரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மஞ்சள் நீர் கிணறு சென்று வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று குண்டம் திறப்பு, மதியம் 2.30 மணிக்கு அக்னி பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, வேல்பூஜை நடந்தது. இரவு வள்ளிக்கும்மியாடம், கம்பத்தாட்டம் நடைபெற்றன.
அதிகாலை 5 மணிக்கு குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதல், 60 நீளம் உள்ள குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவுபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், துணைஆணையர் ஹர்ஷினி, கோயில் செயல் அலுவலர் குழந்தைவேல், தக்கார்சபரீஸ்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
The post சிவளாபுரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா appeared first on Dinakaran.