திருப்பூர்,மே6: ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை விண்ணப்பங்கள், வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மனுவில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தை கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுதும், திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த நடராஜன் (58) என்பவர், நகலெடுத்து ரூ. 50க்கு விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து உரிமைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியர் ஆகியோர் இது தொடர்பாக அவரிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.அப்போது நடராஜன், இருவரிடம் அப்படித்தான் விற்பேன்என்று தெரிவித்ததுடன் அவர்களை தகாத முறையில் பேசி, தனது செருப்பை தூக்கி காண்பித்துள்ளார். இதில் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் அளித்தனர். இதனால் கலெக்டா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post இலவச படிவத்தை விற்றதாக புகார் தட்டி கேட்ட அதிகாரிகளிடம் தகராறு appeared first on Dinakaran.