பல்லடம், மே 5: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம் கிராமங்களில் ஐடிபிஎல் எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் 162 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பல்லடம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் எண்ணெய் குழாய் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றி அமைக்கும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post எண்ணெய் குழாய் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஆலோசனை appeared first on Dinakaran.