திருப்பூர், மே 10: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திராவிடர் தளத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதி, சமூக அடையாளங்களை உடனடியாக அகற்றி, உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், இந்த 2025 மற்றும் 2026ம் ஆண்டு கல்வி ஆண்டிலேயே ஜாதிப்பெயர்களை நீக்க வேண்டும்.
நீக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் மாணவர்கள் 2026-2027 கல்வி ஆண்டில் பிற பள்ளிகளுக்கு மாற்றப்பட வேண்டும். இவற்றை கண்காணிக்க திருப்பூர் மாவட்ட அளவில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உடையவர்கள் அடங்கிய சமூகநீதி கண்காணிப்பு குழுவை அமைத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
The post கல்வி நிறுவனங்களில் உள்ள ஜாதி அடையாளங்களை அகற்றக்கோரி மனு appeared first on Dinakaran.