போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்பி இல்லத்தில் ஆலோசனை

திருப்பூர், மே. 3:ஷாகின்பாத் போராட்ட குழு மற்றும் அனைத்து இஸ்லாமிய குழு சார்பாக, வக்பு திருத்த சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் போராட்டம் நடைபெறுகிறது.இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டு பேசுகிறார். இது தொடர்பாக சென்னையில் அவரது இல்லத்தில் திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ கனிமொழி எம்பியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

The post போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்பி இல்லத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: