அடுக்குமாடி குடியிருப்பில் 77 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

திருப்பூர், மே 3: தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வீடுகள் கட்டி, குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வீடு மற்றும் நிலம் இல்லாத பலர் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, செட்டி பாளையத்தில் 240 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதற்கு பங்களிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆகும். ஏற்கனவே 70 பேருக்கு முதற்கட்டமாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் 2வது கட்டமாக நேற்று 77 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. குலுக்கல் முறையில் உதவி பொறியாளர்கள் சர்மிளா தேவி மற்றும் கார்வேந்தன் ஆகியோர் வீடுகளை ஒதுக்கீடு செய்தனர்.

The post அடுக்குமாடி குடியிருப்பில் 77 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: