திருப்பூர், ஏப்.24: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தக்காளி வெங்காயம், காலிபிளவர், முட்டைகோஸ், கீரை வகைகள், புடலங்காய், சுரைக்காய், மாங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், முருங்கக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புடலங்காய் மகசூல் அதிகரித்திருந்ததன் காரணமாக நேற்று தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு புடலங்காய் வரத்து அதிகரித்து இருந்தது.
இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நீர் சத்து மிகுந்த கொடி காய் என்பதால் வியாபாரிகளும் பொதுமக்களும் புடலங்காயை அதிகளவு வாங்கிச் சென்றனர்.
The post வரத்து அதிகரிப்பால் புடலங்காய் விலை சரிவு appeared first on Dinakaran.