திருப்பூர்: வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ரிசப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் நேற்று குடி பெயர்ந்தார். இதன் காரணமாக கோயில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது. திருப்பூர் அரிசி கடைவீதி பகுதியில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரகங்கள் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பூர் மாநகரிலுள்ள சோழாபுரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
The post குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.