அவிநாசி: மே 20ம் தேதி மத்திய தொழிற்சங்க அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம் தொழிற்சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர், விவசாய, விவசாய தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக, மே 20ம் தேதி மத்திய தொழிற்சங்க அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க, அவிநாசி ஒன்றிய அளவிலான மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவிநாசி சிஐடியூ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொமுச மாவட்ட கவுன்சிலிங் துணைத்தலைவர் ரங்கசாமி, தொமுச மாவட்ட செயலாளர் மனோகரன், எம்எல்எப் மாவட்ட துணை செயலாளர் முருகேசன் ஏஐடியுசி அவிநாசி ஒன்றிய செயலாளர் சண்முகம், சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி, ஐஎன்டியூசி ஒன்றிய நிர்வாகி நவநீதக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களை திரட்டி, மே20ம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது. என்றும், பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை விளக்கி வரும் 17ம் தேதி வட்டாரப்பகுதிகளில் வேன் பிரசாரம் செய்வது என்றும், 2000, துண்டறிக்கை 200 சுவரொட்டி அச்சிட்டு வழங்குவது எனவும், அனைத்து தொழில் அமைப்புகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.