வடக்கு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆதார் முகாம்

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆதார்களில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள ஆதார் மையங்களுக்கு சென்று வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான திருத்தங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே வாரந்தோறும் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை ஆதார் மையங்களுக்கு விடுமுறை ஆகும். இதற்கிடையே பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்கிறவர்களுக்கு வசதிக்காக வாரந்தோறும் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வருகிற ஆதார் மையங்கள் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆதார் முகாம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகவரி மாற்றம், பெயர் மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். வரும் 18ம் தேதி தெற்கு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெறுகிறது.

The post வடக்கு தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆதார் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: