தம்பதி போல் வாழ்ந்த நிலையில் சந்தேகம் திருநங்கையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்று பார்சல் கட்டிவீச்சு

*உணவு டெலிவரி பாய் கைது

திருமலை : நடத்தை சந்தேகம் காரணமாக தம்பதி போல் வாழ்ந்த திருநங்கையை துண்டுதுண்டாக வெட்டிக்கொன்று பார்சல் கட்டி வீசிய உணவு டோர்டெலிவரி பாய் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம், அனக்காப்பள்ளி மாவட்டம், காசிம்கோட்டா அருகே போயவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பாலத்தின் அடியில் ரத்தக்கறையுடன் பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட மூட்டை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், அனகாப்பள்ளி போலீசாருக்கு கடந்த 18ம் தேதி தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கை மற்றும் இடுப்புகீழ் பகுதி துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போயவரம் பகுதியில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் துணியில் சுற்றப்பட்டு கிடந்தது.

இவை அனைத்தும் ஒரே உடலுக்குரியது என்பதை போலீசார் உறுதிசெய்தனர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவர் ஆணா?, பெண்ணா? என்பதை உறுதிசெய்ய முடியாத நிலையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நபர், அனகாபள்ளி கவரபாளையத்தை சேர்ந்த சேர்ந்த திலீப் என்கிற தீபு (40) என்ற திருநங்கை என்பதும், இவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் இரகவரம் பகுதியை சேர்ந்த உணவு டோர்டெலிவரி தொழிலாளியான பன்னி (35) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக நாகலாபள்ளியில் வாடகை வீட்டில் தம்பதி போல் வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நாகலாபள்ளியில் பதுங்கியிருந்த பன்னியை போலீசார் நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பன்னி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:திருநங்கை தீபுவுடன் கடந்த 5 ஆண்டுகளாக நாகலாபள்ளியில் வாடகை வீட்டில் பன்னி வசித்து வந்துள்ளார். காலையில் பணிக்கு சென்று இரவு வீடு திரும்பும் பன்னிக்கு, தீபுவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதேபோல் கடந்த 17ம்தேதி இரவு இவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பன்னி, வீட்டில் இருந்த கத்தியால் திருநங்கை தீபுவை சரமாரி வெட்டிக்கொலை செய்தார்.

பின்னர் இதை மறைப்பதற்காக சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, பார்சல் கட்டினார். அதை 2 இடங்களில் வீசியுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைடுத்து பன்னியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தம்பதி போல் வாழ்ந்த நிலையில் சந்தேகம் திருநங்கையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்று பார்சல் கட்டிவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: