மாற்றுத்திறனாளி குழந்தைகள் 48 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா வேலூர் கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பினார் சிறப்பாசிரியர்கள், பெற்றோர்களுடன்

 

வேலூர், மார்ச் 22: வேலூரில் இருந்து செவித்திறன் குறைந்த மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகள் 48 பேர் நேற்று சிறப்பாசிரியர்கள், பெற்றோர்களுடன் ஏலகிரிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2024-25ம் நிதிஆண்டு ஆரம்ப நிலை பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகளுடன் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் ஒரு நாள் சுற்றுலா செல்லும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் செவித்திறன் குறைந்த ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள், மூளை வளர்ச்சி குறைந்த ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் பிறந்த குழந்தை முதல் 6 வயதுடைய 21 குழந்தைகள், புறஉலக சிந்தனையற்றோருக்கான ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிலும் பிறந்த குழந்தை முதல் 6 வயதுடைய 19 குழந்தைகள் என்று மொத்தம் 48 பேர் நேற்று ஒரு நாள் ஏலகிரி மலைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக இவர்கள் 48 பேரும் அவர்களின் பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோருடன் நேற்று காலை 8.30 மணியளவில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு அவர்களை சிறப்பு சுற்றுலா பேருந்து மூலம் அவர்களை கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளி குழந்தைகள் 48 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா வேலூர் கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பினார் சிறப்பாசிரியர்கள், பெற்றோர்களுடன் appeared first on Dinakaran.

Related Stories: