காரைக்குடி, மார்ச் 22: காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி நிலுவையில் உள்ளவர்களிடம் வசூல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளில் ஒருசிலர் வீடு, கடைகளுக்குள் சென்று அநாகரிக வார்த்தைகளில் பேசுவதோடு, அடவாடியாக நடந்துகொள்வதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்தும் சொத்துவரி உயர்வை குறைக்க வலியுறுத்தி, ஈரோடு, தூத்துக்குடி மாநகராட்சி அவசக்கூட்டத்தில் சொத்துவரி குறைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளது போல் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்திலும் அவசரகூட்டம் கூட வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்திற்கு தொழில்வணிக்கழக நிர்வாகிகள் மற்றும் மாநகர வரி செலுத்துவோர் மக்கள் மன்றக்குழுவினர் திரளாக வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த துணைமேயர் நா.குணசேகரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக்கொண்டு மேயர், ஆணையரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
The post முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.