திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலை கலெக்டர் அலவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், வேளாண் இணை இயக்குநர் கண்ணகி, முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல ேமலாளர் தேன்மொழி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள்: திருவண்ணாமலை பகுதியில் மலர் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. ஆனால், போதுமான விலையும், லாபமும் கிடைக்கவில்லை. எனவே, நறுமண (சென்ட்)தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரப்பட்டு கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தக கட்டிடம் பழுதாகியுள்ளது. எனவே, அதனை சீரமைக்க வேண்டும். கோவூர் கால்நடை மருந்தகத்துக்கு டாக்டரை நியமிக்க வேண்டும், புதுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் தொழிலாளர்களாக உள்ளனர். எனவே, புதுப்பாளையம் வழியாக பெங்களூருக்கு பஸ் இயக்க வேண்டும். பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விற்பவை வாய்ப்பு குறைவாக உள்ளது.
எனவே, பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு தரப்பில் உதவிகள் செய்யவும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டுநீர் பாசன திட்டத்தில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. பயனாளிகள் தேர்விலும் பல்வேறு தவறுகள் நடந்துள்ளது. எனவே, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு சொட்டு நீர் பாசனம் கிைடக்க உத்தரவிட வேண்டும். உழவர் அட்டை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு, அரசு வழங்கும் திட்டங்கள் முறையாக கிடைக்கவில்லை. அரசு வழங்கிய இலவச பட்டாக்களை, அரசு கணக்கில் ஏற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கில் ஏற்றாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நாயுடுமங்கலம் பகுதியில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விரைவில் திறக்க வேண்டும். போளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்ெதாகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். வெள்ள நிவாரணம் இதுவரை பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் 33 சதவீதத்துக்கும் அதிகமாக பாதித்த நன்செய் பயிருக்கு எக்டருக்கு ₹17 ஆயிரமும், புன்செய் பயிர் எக்டருக்கு ₹8,500ம் இழப்பீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 109752 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ₹77.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை ₹34 கோடி நிதி சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் மீதமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல், மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற நறுமண தொழிற்சாலை தொடங்குவதன் சாத்தியம் குறித்து ஆராயப்படும். மேலும், போளூர் தரணி சர்க்கரை ஆலை இதுவரை ₹12 கோடி நிலுவைத்தொகை வழங்கியிருப்பதாகவும், மீதமுள்ள ₹12 கோடியை ஒரு வாரத்துக்குள் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ₹34 கோடி நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது * குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல் * நறுமண தொழிற்சாலை ெதாடங்க ஆய்வு செய்ய நடவடிக்கை பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு appeared first on Dinakaran.