கோயில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை, மார்ச் 22: சிவகங்கை தெற்கு ரதவீதி ஒரு சொல் வாசகி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதளுடன் விழா தொடங்கி 10 நாட்கள் மூலவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக திருவிளக்கு பூஜை வழிபாட்டினை முன்னிட்டு கோயில் முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்கள பொருட்களை வைத்து கணபதி பூஜை உடன் திருவிளக்கு பூஜையை துவங்கினர். கோயில் அர்ச்சகர் மந்திரங்கள் கூற தொடர்ந்து 108 போற்றி மந்திரங்கள் காயத்ரி மந்திரங்கள், மகாலட்சுமி மந்திரங்கள் கூறி திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து விளக்கு பூஜை செய்தனர். நிறைவாக திருவிளக்கிற்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர்.

The post கோயில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: