தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட 82 டூவீலர்கள் தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடந்தது. 82 வாகனங்களில் 70 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. ₹8 லட்சத்து 97 ஆயிரத்துக்கு வாகனங்கள் ஏலம் போனது. இந்த தொகை அரசு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த ஏலம் எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில் நடந்தது.
The post தர்மபுரியில் மதுவிலக்கு வேட்டையில் சிக்கிய வாகனங்கள் appeared first on Dinakaran.