தென்காசி, மார்ச் 23: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரதவீதி பகுதியில் நீண்ட காலமாக அடைபட்டு கிடந்த கழிவு நீரோடை நெடுஞ்சாலை துறை சார்பில் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம், திருப்பணிக்குழு, நகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் தன்னார்வலர்களும், உபயதாரர்களும், பக்தர்களும் இதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.
நகராட்சி சார்பில் ரதவீதிகள், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் கூலக்கடை பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்தும் அவற்றை அப்புறப்படுத்தினர். தென்காசி கீழரத வீதியில் கோயில் நுழைவுப் பகுதிக்கு வடபுறம் சாலையின் அடியில் குறுக்கே கிழக்கு மற்றும் மேற்காக அமைக்கப்பட்டிருந்த கழிவு நீரோடை நீண்ட காலமாக அடைபட்டு கிடந்தது. தற்போது அந்த கழிவு நீரோடை நெடுஞ்சாலை துறை சார்பில் தோண்டப்பட்டு குழாய் பதித்து சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
The post தென்காசி கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி ரதவீதியில் கழிவு நீரோடை சீரமைப்பு appeared first on Dinakaran.