ஐஐடி முன்னாள் மாணவர்களின் தொழில்நுட்ப கண்காட்சி

சென்னை, மார்ச் 23: சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களின் சிறப்பு கல்வி திட்டத்தின் (PALS) சார்பில் 12வது தொழில்நுட்ப கண்காட்சி (InnoWAH-2025) ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் ஐஐடி முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 62 அணிகளின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

“தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம்: 2047ல் வளர்ந்த பாரதம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கண்காட்சி அமைந்திருந்தது. அதில் இடம்பெற்ற டிரோன்கள், மருத்துவ சாதனங்கள், மின்வாகனங்கள் பொறியியல் மாணவர்களையும் பெற்றோரையும் பெரிதும் கவர்ந்தன. சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 14 மாணவர்களுக்கு மெட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் ராமானுஜம் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

The post ஐஐடி முன்னாள் மாணவர்களின் தொழில்நுட்ப கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: