கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி,மார்ச் 23: கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக ஹைதராபாத் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்மபாட்டு ஆய்வகத்தின் திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட இயக்குநர் ராஜாசிங் தங்கதுரை கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் 16 துறைகளைச் சேர்ந்த 536 இளங்கலை மற்றும் முதுகலை, முதுநிலை பட்டதாரிகள் பட்டங்களை பெற்றனர். பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் கிருஷ்ணவேணி, கணிதப்பயன்பாட்டியல் துறைத் தலைவர் காந்திமதி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

The post கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: