சேலம், மார்ச் 23:சேலம் அன்னதானப்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர் சரவணன் மகன் தினேஷ்குமார் (21). இவர், கடந்த 20ம் தேதி இரவு அதேப்பகுதியை சேர்ந்த நண்பரான மணி (28) என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். தினேஷ்குமார் போதையில் இருந்தபோது, அவரது செல்போனை மணி திருடியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்றதும் போன் இல்லாததை கண்டு, தனது தாயார் பார்வதியிடம் கூறியுள்ளார்.
உடனே பார்வதி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் மணியிடம் சென்று, செல்போனை கேட்டுள்ளனர். அப்போது அவர், தகராறில் ஈடுபட்டு தினேஷ்குமாரை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில், தினேஷ்குமாருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட மணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், மணியை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
The post போதையில் போனை திருடி வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.