சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

உத்திரமேரூர், மார்ச் 23: உத்திரமேரூர் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலை பள்ளியில் சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வீடுகள், தொழிற்சாலைகளில், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் செல்போன் கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவிகள் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தோட்டங்கள் அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி செடி மரங்கள் வளர்க்க வேண்டும், என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

The post சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: