கூடுவாஞ்சேரி, மார்ச் 23: கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். உலக தண்ணீர் தினம் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக 4வது வார்டு உறுப்பினர் சசிகலா கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
The post கீரப்பாக்கம் அரசு பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.