மினி பேருந்து சேவை துவங்க தேர்வான நபர்களுக்கு ஆணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம பொதுமக்களும் பயனடையும் வகையில், மினி பேருந்து சேவை வழங்க வேண்டும் என வெளியிடப்பட்ட அரசாணையின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களான காஞ்சிபுரத்தில் 29 வழித்தடங்களிலும், பெரும்புதூரில் 5 வழித்தடங்களிலும், குன்றத்தூரில் 5 வழிதடங்களிலும் என மொத்தம் அனைத்து எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கும் மினி பேருந்து சேவை 39 வழித்தடங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளிவந்த மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 29 வழிதடங்களுக்கு 27 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், 1 வழித்தடத்திற்கு 2 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், அதனை குலுக்கல் முறையில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 26 வழித்தடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் 3 வழிதடங்களுக்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை. அதேபோல், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 5 வழித்தடங்களுக்கு 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், 1 வழிதடத்திற்கு 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், அதனை குலுக்கல் முறையில் கலெக்டர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வழிதடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. பெரும்புதூரில் 1 வழித்தடத்திற்கு எவரும் விண்ணப்பிக்கவில்லை. அதேபோல், குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 5 வழித்தடங்களுக்கு 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், 2 வழிதடத்திற்கு 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், அதனை குலுக்கல் முறையில் கலெக்டர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வழித்தடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு, மினி பேருந்து சேவை துவங்க தேர்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, தேர்வான நபர்களுக்கு மினி பேருந்து சேவை தொடங்குவதற்கான ஆணையினை வழங்கினார். நிகழ்வின்போது காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் உடனிருந்தனர்.

The post மினி பேருந்து சேவை துவங்க தேர்வான நபர்களுக்கு ஆணை appeared first on Dinakaran.

Related Stories: