திருப்போரூர், மார்ச் 24: திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி கோமதி (55). இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் அருகில் சித்தாள் வேலைக்காக காத்திருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வேலை இருப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.
சிறுதாவூர் அருகே வனப்பகுதியில் வண்டியை நிறுத்திய அந்த வாலிபர் அப்பெண்ணை தாக்கி காதை அறுத்து அவர் அணிந்திருந்த இரு கம்மல்கள் மற்றும் ஒரு சவரன் செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றார். காது அறுந்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் இருந்தவரை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்த அஜீத் (27) என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளி இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜீத்தை கைது செய்து அவனிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
The post பெண்ணின் காதை அறுத்து கம்மல், செயின் வழிப்பறி: வாலிபர் கைது appeared first on Dinakaran.