பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் அன்பரசன், சாமிநாதன் வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அய்யப்பன்தாங்கலில் நடைபெற்றது. அய்யப்பன்தாங்கலில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மனிதநேய உதய நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம் தலைமை தாங்கினார். ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி சாமிநாதன், உஷா நந்தினி எத்திராஜ் ஆகியோர் வரவேற்று பேசினர். திமுக நிர்வாகிகள் எத்திராஜ், பொன் ஜீவா, ராஜா தேசிங்கு, ஜெயகரன், சாரதி பெரியநாயகம், சுலைமான் சையது, தங்கராஜ், ஜனார்த்தனன், அமுதா சத்திய பிரியா, ஹரி பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் செய்திகள் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளரும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன், துணைப் பெருந்தலைவர் உமா மகேஸ்வரி வந்தே மாதரம் ஆகியோர் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.
முடிவில் கிளைக் கழகச் செயலாளர்கள் கோவிந்தன், ந.பா அஸ்வின் குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
The post முதல்வர் பிறந்த நாள் விழா; நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.